குறளமுதப் படையல் - 36.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
அருமைத் தமிழர்க்கெல்லாம்...
நன்னாள் வாழ்த்துகள்!
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
இன்றைய குறளமுதப் படையல்:
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அறத்துப்பால்- இல்லறவியல்..
அதி.24- புகழ். (இசை அல்லது கீர்த்தி)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஈந்து வாழ்ந்து எய்தும் புகழே
என்றும் இங்கே ஊதியம் உயிர்க்கு!
"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. ". (குஎ: 231)
------
உலகோர் போற்றும் உயர்மொழி யாவும்
இரப்பார்க்கு ஈந்திடும் உயர்ந்தோர் புகழே!
"உரைப்பார் உரைப்பவை எல்லாம்
இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்." ( குஎ: 232)
-------
ஒப்பிலாப் புகழோடு உயர்ந்து நிற்றலே
எப்போ துமிங்கே அழியா தவொன்றே!
"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். " ( குஎ: 233)
--------
உலகில் ஒருவர் உயர்புகழ் எய்தின்
புலவரும் அடையார் புத்தேள் உலகம்!
"நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. " ( குஎ: 234)
---------
நத்தம் செத்து முத்தைத் தந்திடும்,
வித்தகர் பெறுவர் செத்தபின் புகழை!
"நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. " ( குஎ: 235)
-----------
வாழின் புகழொடு வாழ்க! இல்லெனின்
வாழாது இங்கேயே வீழ்தல் நன்று!
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. " ( குஎ: 236)
----------
இசைபெற இயலாதார் இகழ்வாரை வசையற்க,
இசைபெற வாழ்தல் அவரவர் கடனே!
"புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்? " ( குஎ: 237)
-----------
இசையெனும் புகழையெய் தாதான் வாழ்க்கை
வசையாம் வையத்து மாந்தர்க்கு எல்லாம்!
"வசையென்ப வையத்தார்க் கெல்லாம்
இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். ". ( குஎ: 238)
-------------
புகழெனும் மாண்பைப் பெறாத மாந்தரைப்
பொறுத்த நிலமும் பழிச்சொல் பெறுமே!
"வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்." ( குஎ: 239)
----------
வன்சொல் நீங்க வாழ்வாரே வாழ்வார்,
இன்சொல் நீங்கி இயங்குவார் உயிரிலார்!
"வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்." ? குஎ: (240)
----------
நன்று நண்பர்களே!
நாம் பிறப்பது முதல்
இறக்கும் வரையிலும்
நம் உடலுடன்
இணைந்து வாழும்
நம் உயிருக்கு
நாம் இவ்வுலகில்
சேர்த்து வைக்கும்
ஒரே ஊதியம் ( வரவு)
புகழ் மட்டுமே!
புகழைத் தவிர்த்து
வேறொன்றுமே இல்லை!
வாழ்க தமிழ்!
வெல்க தமிழினம்!!
அன்புடன் உங்கள்,
குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்.
◀▶. ◀▶. ◀▶. ◀▶. ◀▶. ◀▶
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
அருமைத் தமிழர்க்கெல்லாம்...
நன்னாள் வாழ்த்துகள்!
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
இன்றைய குறளமுதப் படையல்:
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
அறத்துப்பால்- இல்லறவியல்..
அதி.24- புகழ். (இசை அல்லது கீர்த்தி)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஈந்து வாழ்ந்து எய்தும் புகழே
என்றும் இங்கே ஊதியம் உயிர்க்கு!
"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. ". (குஎ: 231)
------
உலகோர் போற்றும் உயர்மொழி யாவும்
இரப்பார்க்கு ஈந்திடும் உயர்ந்தோர் புகழே!
"உரைப்பார் உரைப்பவை எல்லாம்
இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்." ( குஎ: 232)
-------
ஒப்பிலாப் புகழோடு உயர்ந்து நிற்றலே
எப்போ துமிங்கே அழியா தவொன்றே!
"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். " ( குஎ: 233)
--------
உலகில் ஒருவர் உயர்புகழ் எய்தின்
புலவரும் அடையார் புத்தேள் உலகம்!
"நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. " ( குஎ: 234)
---------
நத்தம் செத்து முத்தைத் தந்திடும்,
வித்தகர் பெறுவர் செத்தபின் புகழை!
"நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. " ( குஎ: 235)
-----------
வாழின் புகழொடு வாழ்க! இல்லெனின்
வாழாது இங்கேயே வீழ்தல் நன்று!
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. " ( குஎ: 236)
----------
இசைபெற இயலாதார் இகழ்வாரை வசையற்க,
இசைபெற வாழ்தல் அவரவர் கடனே!
"புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்? " ( குஎ: 237)
-----------
இசையெனும் புகழையெய் தாதான் வாழ்க்கை
வசையாம் வையத்து மாந்தர்க்கு எல்லாம்!
"வசையென்ப வையத்தார்க் கெல்லாம்
இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். ". ( குஎ: 238)
-------------
புகழெனும் மாண்பைப் பெறாத மாந்தரைப்
பொறுத்த நிலமும் பழிச்சொல் பெறுமே!
"வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்." ( குஎ: 239)
----------
வன்சொல் நீங்க வாழ்வாரே வாழ்வார்,
இன்சொல் நீங்கி இயங்குவார் உயிரிலார்!
"வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்." ? குஎ: (240)
----------
நன்று நண்பர்களே!
நாம் பிறப்பது முதல்
இறக்கும் வரையிலும்
நம் உடலுடன்
இணைந்து வாழும்
நம் உயிருக்கு
நாம் இவ்வுலகில்
சேர்த்து வைக்கும்
ஒரே ஊதியம் ( வரவு)
புகழ் மட்டுமே!
புகழைத் தவிர்த்து
வேறொன்றுமே இல்லை!
வாழ்க தமிழ்!
வெல்க தமிழினம்!!
அன்புடன் உங்கள்,
குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன்.
◀▶. ◀▶. ◀▶. ◀▶. ◀▶. ◀▶