Thursday, 26 January 2017

குறள் கற்போம் - தொடர்- 08

திருக்குறளை எளிமையாகக் கற்போம். - தொடர் - 08
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

இனிய பெருந்தகையீர், வணக்கம். திருக்குறளை அனைவரும் எளிதில் கற்றுக் கொள்ளும் முறையினை விளக்கும் பொருட்டுத் தொடங்கப்பட்டுள்ள இத்தொடரின் எட்டாவது நிலைக்கு நாம் இப்போது வந்துள்ளோம். முந்தைய பதிவில், குறள்களை ஒருவர் கற்று அறிவதற்குப் புணர்ச்சி நெறிளைக் கற்றுக் கொள்வது இன்றியமையாதது என்று பார்த்தோம். இவை திருக்குறளில் எவ்வாறு ஆளப்படுகின்றன என்பதையும் அவ்வப்போது சில குறட்பாக்களில் பார்த்து வருகின்றோம். புணர்ச்சி நெறியில் மேலும் சிலவற்றை இன்று அறிந்து கொள்வோம்.

8. பண்புப் பெயர்ப் புணர்ச்சி. 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

ஒரு பொருளின் தன்மை, நிறம், இயல்பு போன்றவற்றைக் குறிப்பதே பண்புப் பெயர் எனப்படும். அப் பெயருடன் அது தொடர்பான வேறு சொற்கள் இணயும்போது ஏற்படும் மாற்றத்தைப் பற்றிக் கூறுவதே இப்புணர்ச்சி. இதற்கான நன்னூல் நெறியாவது:- " ஈறுபோதல் இடையுகரம் இய்யாதல் ஆதி நீடல் அடியகரம் ஐயாதல் தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல் இனமிகல் இவையவும் பண்பிற் இயல்பே.
( நன்னூல் - 136)

இனி, இந் நெறியினை விரித்துப் பார்ப்போம்.
(1). ஈறு போதல் : - [ஈற்றெழுத்து கெட்டுப் புணர்தல்]
👃👃👃👃👃👃👃
எகா : கடுமை + நடை = கடுநடை ( மை- கெட்ட நிலை)
(2) இடையுகரம் இய்யாதல் :
👃👃👃👃👃👃 👃👃👃👃
( இடையில் உள்ள உகரம் இகரமாகத் திரிதல் ) எ-கா: கருமை + அன் = ? ( கரியன்) ? இங்கு, ' ரு' = ர் + உ > என்பது ~ ர் + இ = ரி ~யாகத் திரிந்து , வருமொழியில் உள்ள ' அ' வுடன் ~ யகர உடம்படுமெய் பெற்று [ ரி+ (ய் +அ= ய) +ன்= க+ ரி+ய+ ன் = கரியன் என்று புணர்ந்தது.

(3) ஆதி நீடல் : ( ஆதி= முதல்):
👃👃👃👃👃👃👃
முதல் எழுத்து நீண்டு புணரும்.

எ-கா: பசுமை + அடை =? ( பாசடை) ? (அ) - முதலில் ஈறுகெட்டு ~ பசு+ அடை = ஆனது; ( ஆ) ஆதி நீண்டு ~ பாசு + அடை என்றாகி, (இ) உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடி ~[ பா + ( ச்+ உ) = பாச் + அடை - என்றாகி, (ஈ) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே என்னும் நெறிப்படி - பாச் + அடை = பாசடை என்றானது.
( 4) அடியகரம் ஐயாதல் :
👃👃👃👃👃👃👃👃👃👃

திருக்குறளை எளிமையாகக் கற்போம்.
தொடர் - 09.
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍

திருக்குறளை எளிமையாகக்
கற்போம்.. தொடர் - 09.
👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌

புணர்ச்சி நெறிகளின் தொடர்...
🔷 🔷 🔷 🔷 🔷 🔷 🔷🔷 🔷 🔷
புணர்ச்சி இலக்கணம்  - வலி மிகும் இடங்கள்.
↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔
      தமிழில் இரு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும்
சேர்க்கை புணர்ச்சி என்று குறிக்கப்படுகின்றது.
இதுபற்றிய தொடர்களை ஏற்கனவே பார்த்துள்ளோம்.
     புணர்ச்சி இலக்கணத்தைச் செம்மையாகத்
தெரிந்து கடைப்பிடித்தால்தான் தமிழைப் பிழைகளின்றிப்
பேசவும் எழுதவும் இயலும். இல்லையாயின்
ஒலிநயமும் கெடும் ; பொருள் மயக்கமும் உண்டாகும்.
   மேலும் , திருக்குறளில் இப் புணர்ச்சி நெறிகள் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன  என்பதையும் அறிந்து கொண்டு குறட்பாக்களைப்  பிழைகளின்றிக் கற்றறியவும்
பேருதவியாக  இருக்கும்.
        இன்று நாம் நமக்கு மிகமிகப் பயன் தருகின்ற
புணர்ச்சி நெறியாகிய வல்லினம் மிகுதல் பற்றிய
செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப் பழத்தை ' வாளப்பளம்' என்பது போலவே
' வாழை பழம் ' என்பதும் பிழையானது ; நகைப்புக்கும்
உரியதாகிவிடும்.
     ' கலைக் கழகம்' என்று வல்லெழுத்து மிகுந்து
இருந்தால்தான் கலை வளர்க்கும் கழகமாக அது
தலைநிற்கும் ; ' கலை கழகம்' என்றால் அது கலைந்து
போகும் கழகமாக நிலை குழையும்!
      ' வேலை கொடு' என்றால் செய்வதற்கு ஏதேனும்
வேலை ( பணி) கொடு என்றும், ' வேலைக் கொடு'
என்றால் போர்க்கருவியாகிய வேலைத் தா ( கொடு)
என்றும் பொருள் வேறுபாடுகள் உண்டாகிவிடும்.
  
' வலி மிகுத்தல்', ' வலி மிகும்' என்றால் என்ன?
↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔

சொற்றொடர்களில் வல்லெழுத்துகளான "க், ச், த், ப்,"
ஆகியவை மிகுந்து( கூடி) வருதலையே சுருக்கமாக
வலிமிகுதல் எனப்படுகிறது. வலிமிகுதலாலும், மிகாது
இயல்பாகவே இருத்தலாலும், சொற்றொடர்களில்
பொருள் வேறுபாடு உண்டாகும். "தந்த பலகை" என்னும்
தொடருக்கும் "தந்தப் பலகை" என்னும் தொடருக்கும் பொருள் வேறுபாடு உண்டு.
தந்த பலகை என்பது கொடுத்த பலகை என்றும், தந்தப் பலகை என்பது தந்தத்தால் ஆன பலகை என்றும்  பொருள்படும்.
தந்த பலகை என்னும் சொல்லில் நிலைமொழியாகிய
'தந்த' என்னும் சொல்லுக்கும் ' பலகை' என்னும்
வருமொழிச் சொல்லுக்கும் இடையில்  ' ப்' என்னும் வல்லொற்று வந்து ' தந்தப் பலகை' என்று  ஆவதையே ' வலிமிகுதல்' என்று
கூறுகின்றோம்.

வலிமிகும் இடங்கள் கீழ்க்கண்டவாறு அமையும்.
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

1) அ, இ, உ என்னும் சுட்டு எழுத்தின் பின்னும்,
    'எ'  - என்னும் வினா எழுத்தின் பின்னும் ஒற்று மிகும்.
-----------------------------------------------------------------------------------------------------
எ-கா:
↔↔
அ+ சிறுவன் = அச்சிறுவன்;
இ+ பையன் = இப்பையன்;
உ + சிறுவன் = உச்சிறுவன் ;
எ + பையன்  = எப்பையன்? ( எந்தப் பையன்?)
🐦🐦 🐦

2)அந்த,  இந்த,  அங்கு, இங்கு, ஆங்கு, ஈங்கு,
   ஆண்டு, ஈண்டு,  அப்படி, இப்படி,
   ஆகிய சொற்களுக்குப் பின் வலிமிகும்.
-----------------------------------------------------------------------------------------------
எ-கா:
↔↔
அந்த + பழம் = அந்தப்பழம் ;
இந்த +கொடி = இந்தக்கொடி.
அங்கு + போனார் = அங்குப்போனார்;
இங்கு + கண்டேன் = இங்குக்கண்டேன்.
ஆங்கு + தேடினேன் = ஆங்குத்தேடினேன்
ஈங்கு  + போனான் = ஈங்குப்போனான்
ஆண்டு + கண்டேன் = ஆண்டுக்கண்டேன்
ஈண்டு + பார் = ஈண்டுப்பார்
அப்படி + கூறு =  அப்படிக்கூறு
இப்படி + சொல் = இப்படிச்சொல்.
🐦🐦🐦

3) வினாச் சொற்களின் பின் ஒற்று மிகும்.
--------------------------------------------------------------------------
எ-கா:
↔↔
எங்கு + சென்றாய்? = எங்குச் சென்றாய்?
எந்த  + பூட்டு ? = எந்தப் பூட்டு ?
எத்துணை + பாடல்கள் ? = எத்துணைப் பாடல்கள்.
எப்படி + சென்றான்? = எப்படிச் சென்றான்?
எவ்வகை + தோப்பு = எவ்வகைத் தோப்பு?
🐦🐦🐦

4) வன்தொடர்க் குற்றியலுகரச்  சொற்களுக்குப் பின்
   வலிமிகும்.
  -----------------------------------------------------------------
   ( ஈற்றெழுத்து ' கு,சு, டு, து, பு, று என ஒன்றில் முடிந்து,
    அதன் முன்னெழுத்து அதே இனத்திலான ' க், ச், ட், த், ப், ற்'
    ஆகியவற்றில் ஒன்றைப் பெற்றிருக்கும். அதாவது,
    க்கு, ச்சு, ட்டு , த்து, ப்பு, ற்று, என்று வரும் சொற்கள்
     --------------
எ.காட்டு:
↔↔↔↔
சுக்கு + பொடி.   = சுக்குப்பொடி
அச்சு + பிழை.   = அச்சுப்பிழை
பட்டு + புடவை   = பட்டுப புடவை,
மத்து + கட்டை   = மத்துக்கட்டை
விற்று + தந்தார்  = விற்றுத் தந்தார்
🐦🐦🐦

5) நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க வலிமிகும்.
---------------------------------------------------------------------------------------------------
எ.காட்டு
↔↔↔↔
மழை + காலம் = மழைக்காலம் (ழை= ழ்+ ஐ) ஐ- உயிர்
பனி + துளி = பனித்துளி ( னி = ன்+ இ) - இ : உயிர்.
கனா + கண்டான் = கனாக் கண்டான்.
[ க+னா = க+ (ன்+ஆ) - இங்கு ' ஆ' - உயிரெழுத்தாகும்].

🐦🐦🐦

6) முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
---------------------------------------------------------------------------------------
எ.காட்டு
↔↔↔
பசு + தோல் = பசுத்தோல்
கணு + கால் = கணுக்கால்
கரு + காய் = கருக்காய்
கரு + தரித்தல் = கருத்தரித்தல்
முழு + பாடல் = முழுப்பாடல்
நடு + தெரு = நடுத்தெரு
திரு + குறள் = திருக்குறள்
கதவு + தாழ்ப்பாள் = கதவுத் தாழ்ப்பாள்
உழவு + தொழில் = உழவுத் தொழில்
🐦🐦🐦

7) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலிமிகும்.
---------------------------------------------------------------------------------------
[ குறிப்பு :
ஈறுகெட்ட = சொல்லின் இறுதியெழுத்து மறைந்த
எதிர்மறை = எதிர்மறைப் பொருளை உணர்த்தி,
பெயர் எச்சம் = வருமொழியில் தோன்றும் பெயர்ச்
சொல்லுக்கு எஞ்சி நிற்கும் சொல்லைக் குறிப்பது].
எ- காட்டு
↔↔↔↔
பேசா பையன் =  பேசா(த)பையன் - த என்னும் இறுதி
எழுத்து மறைந்துள்ளது.

பேசா + பையன்= பேசாப் பையன்
ஓடா + குதிரை = ஓடாக் குதிரை
🐦🐦🐦

8) அகர, இகர ஈற்று வினையெச்சங்களின் பின்
வலிமிகும்.
-----------------------------------------------------------------------------------
[ குறிப்பு :
நிலைமொழியில் முடிவு பெறாத வினைச்சொல்லாகவும்,
வருமொழியின் சொல் வினைச்சொல்லாகவே முடிவது
வினையெச்சம் ஆகும். ]
எ.காட்டு.
↔↔↔↔
செய்ய + சொல் = செய்யச்சொல்
[ செய்+(ய்+அ =ய) - இங்கு 'அ' - ஈற்றெழுத்தாகவுள்ளது.
ஆட + கண்டான் = ஆடக் கண்டான்.
பாட + தெரியும் = பாடத் தெரியும்.
ஆடி + பாடினான் = ஆடிப் பாடினான்
[ ஆ +(ட்+இ= டி) - இங்கு ' இ' ஈற்றெழுத்தாகவுள்ளது.
தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான்.
🐦🐦🐦

9)  ஆய், போய் என முடியும் வினையெச்சங்களின்
பின் வலிமிகும்.
-----------------------------------------------------------------------------------
எ.காட்டு:
↔↔↔↔
வருவ(தாய்) + கூறினான் = வருவதாய்க் கூறினான்.
வருவ( த்+ ஆ=தா) + ய் = வருவதாய் ( ஆ+ய்= ஆய் ) -
  - ஆய் என முடிகின்றது.
படிப்ப(தாய்) + சொல் = படிப்பதாய்ச் சொல்.
போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்.
போய் + சேர் = போய்ச் சேர்.
( இரண்டிலும் ' போய்' என்றே முடிகின்றது.
🐦🐦🐦🐦

10)  இனி, தனி, மற்ற, மற்றை -ஆகிய சொற்களின் பின்
வலிமிகும்.
-----------------------------------------------------------------------------------------------
எ-கா:
↔↔
இனி+ போகலாம் = இனிப் போகலாம்
தனி + காடு = தனிக் காடு
மற்ற + பையன்கள் = மற்றப் பையன்கள்.
மற்றை + பேச்சு = மற்றைப் பேச்சு
🐦🐦🐦

11) தனிக்குறிளை அடுத்துவரும் எழுத்து ' ஆ' என்னும்
நெடிலில் முடிந்தால் ஒற்று மிகும் .
---------------------------------------------------------------------------
எ-கா:
↔↔↔
பலா + சுளை   = பலாச்சுளை
இரா + பகல்  = இராப்பகல்
( இ+ ( ர்+ ஆ= ரா)  - இங்கு ' இ' என்னும் தனிக்குறிலை
அடுத்த எழுத்தாகிய ' ரா' என்பது ' ஆ' என்னும் நெடிலில்
  முடிந்துள்ளதை அறியலாம்.
🐦🐦🐦

12) உவமைத் தொகையில் ஒற்று மிகும்.
-----------------------------------------------------------------------
[குறிப்பு :  உவமானத்திற்கும்( எடுத்துக் காட்டாக
ஆளப்படும் உலகம் அறிந்த ஒரு பொருள்),
உவமேயத்திற்கும் ( எடுத்துக்காட்டடுக்கு நிகரக
முன் வைக்கப்படுகின்ற பொருள்) இடையில்
போல், போன்ற, நிகர, அன்ன, இன்ன, அற்று,
அற்றே முதலாய உவம உருபுகள் மறைந்து வருவது
உவமைத் தொகையாகும்.].
எ-கா:
↔↔↔
முத்து + பல் = முத்துப்பல்.
= முத்துப் போன்ற பல் என விரிவதால், ' போன்ற'
என்னும் உவம உருபு மறைந்து நிற்பதை அறியலாம்.
( இங்கு முத்து என்பது பொதுவான உவமானச் சொல்.
பல் என்பது முன் சொன்ன உவமானத்திற்குச்
சான்றாக முன்வைக்கப்படும் பொருள் ஆகும்.
மேலும் பல சான்றுகள:
↔↔↔
மலர் + கை = மலர்க்கை
குவளை+ கண் = குவளைக்கண்
வேய் + தோள் = வேய்த்தோள்
🐦🐦🐦

13) உருவகத் தொகையில் ஒற்று மிகும்.
-----------------------------------------------------------------------------
[குறிப்பு : இங்கு உவமையாகக் கூறப்படும் பொருள்
உவமேயமாகக் காட்டப்படும் பொருளுக்கு முன் நிற்கும்].
எ-கா:
↔↔↔
முகம்+ தாமரை = முகத்தாமரை.
[ இங்குத் தாமரை போன்ற முகம் ( தாமரை முகம்) என்பது
முகத்தாமரை என்று உருவகத் தொகை யானது]

14) பண்புத் தொகையில் ஒற்று மிகும்.
----------------------------------------------------------------------
[ குறிப்பு : பண்புப் ( நிறம், குணம், அளவு, சுவை, வடிவம்,
தன்மை ஆகிய ) பெயர்களோடு
பெயர்ச்சொற்கள் சேர்ந்து நிற்க, அச் சொல்லைப்
பிரிக்கும்போது ' ஆகிய'
என்னும் பண்பு உருபு இடையில் தொக்கி
( மறைந்து) நின்று பொருள் கொடுப்பது பண்புத் தொகை
எனப்படும்.
எ-கா:
↔↔↔
செம்மை + தமிழ் = செம்மைத் தமிழ் ( செம்மை ஆகிய தமிழ்)
கருப்பு + கொடி  = கருப்புக் கொடி
உண்மை + கதை = உண்மைக் கதை
இளமை + காலம் = இளமைக் காலம்.
சிவப்பு + சட்டை = சிவப்புச் சட்டை
இனிப்பு + பண்டம் = இனிப்புப் பண்டம்.( இனிப்பாகிய பண்டம்)
முதுமை + பருவம் = முதுமைப் பருவம்.
வெள்ளை + தாள் = வெள்ளைத் தாள்.
பச்சை + பட்டு = பச்சைப் பட்டு
வட்ட + கோட்டை = வட்டக் கோட்டை.( வட்டமாகிய கோட்டை)
🐦🐦🐦🐦

15) இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வலி மிகும்.
----------------------------------------------------------------------------------------------
[ குறிப்பு : சாரைப் பாம்பு -  இங்குச்  சாரை என்பது
ஒருவகைப் பாம்பின் சிறப்புப் பெயர். பாம்பு என்பது
பலவகைப் பாம்புகளுக்கும் உரிய பொதுப் பெயராகும்.
இரண்டும் தனித்தனிப் பெயர்களேயாயினும் சிறப்புப்
பெயரும்  பொதுப் பெயரும் இணைந்து ஒரு பொருளைக்
குறிக்குமாறு இணைந்து நிற்பதால் இது
இருபெயர் ஒட்டு எனப்படும்.
'சாரை யாகிய பாம்பு '  என்னுமாறு நிலைமொழிக்கும்
வருமொழிக்கும் இடையில் இடம்பெற வேண்டிய ' ஆகிய'
என்னும் பண்புருபு மறைந்து நிற்பதால் இது
' இரு பெயரொட்டுப் பண்புத் தொகை' எனப்படும்.
எ-கா:
↔↔↔
செவ்வாய் + கிழமை = செவ்வாய்க் கிழமை.
----இவ்வாறே.....
பன்னீர்ச் செல்வம்
ஆடவைத் திங்கள்
சிறுத்தைப் புலி
தச்சுத் தொழில்
முல்லைப் பூ
வேங்கைப் புலி....
🐦🐦🐦

16) இரண்டாம் வேற்றுமை விரியிலும்,
      நான்காம் வேற்றுமை  விரியிலும் ஒற்று மிகும்.
----------------------------------------------------------------------------------------
(1) இரண்டாம் வேற்றுமை விரி:
        ' நூல்' என்னும் சொல்லோடு ' ஐ' என்னும் இரண்டாம்
வேற்றுமை உருபு சேர்ந்து ' நூலை' என நிற்கின்றது.
        ' படி' என்னும் வருமொழிக்கு ஏற்ப ' நூலை' என்னும்
நிலைமொழியின் பின் வல்லெழுத்து மிகுந்து
' நூலைப் படி' என்று ஆகும். இவ்வாறு ' ஐ' என்னும்
உருபு வெளிப்பட நிற்பது ' இரண்டாம் வேற்றுமைத்
தொகா ( தொக்கி நிற்காத) நிலைத் தொடராகும்.
இது "( இரண்டாம்) ' வேற்றுமை விரி' " என்றும் கூறப்படும்.

எ-கா:
↔↔↔
மூட்டை + கட்டு = மூட்டையைக் கட்டு!
  - இவ்வாறே-....
உண்மையைச் சொல்!
யாரைப்  பிடித்தாய்?
பாட்டைக் கேள்!
கையைத் தட்டு!
பாலைக் குடி!
விரலைத் தொடு!
ஊரைச் சுற்றாதே! ......என்றும் வரும்.

(2) நான்காம் வேற்றுமை விரி.
நான்காம் வேற்றுமை உருபு ' கு' ஆகும்.
நிலைமொழியொடு வருமொழியின் இடையில்
இவ் உருபு வெளிப்பட நிற்பது 'நான்காம் வேற்றுமை விரி'
ஆகும்.
எ-கா:
↔↔↔
வீட்டுக்கு + செல் = வீட்டுக்கு(ச் )செல்!
கோவிலுக்கு + போ = கோவிலுக்கு( ப்) போ!
மொழிக்கு + தொண்டாற்று = மொழிக்கு(த்) தொண்டாற்று!
🐦🐦🐦

17)  இரண்டாம் உருபும் பயனும் உடன் தொக்க தொகையில்
வலி மிகும்.
----------------------------------------------------------------------------------
எ-கா:
↔↔↔
தயிர் + குடம் = தயிர்க் குடம். = ( தயிரை உடைய குடம்)
இங்கு இரண்டாம் வேற்றுமை உருபாகிய ' ஐ' ,
வெளிப்படாமல் வருமொழியுடன் மறைந்து நின்று
குடத்தின் பயனைச் சுட்டி நிற்கின்றது.
- இவ்வாறே-....
கொடி - தேர் = கொடித் தேர். = கொடியை உடைய தேர்.
முடித் தலை;  பொடிக் குடுக்கை ; செருப்புக் கால்;
வளைக் கை ; திரைக் கடல் ; தாமரைக் குளம்.....
🐦🐦🐦

18) மூன்றாம் உருபும் பயனும் உடன் தொக்க தொகையில்
ஒற்று மிகும்.
--------------------------------------------------------------------------
மூன்றாம் வேற்றுமை உருபுகள்:
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்.
------
இவற்றில் ஏதேனும் ஓர் உருபு தொக்கி  நின்று
வருமொழியில் உள்ள பொருளின் பயனைக் குறித்து
நின்றால் வலி மிகும்.
எ-கா:
↔↔↔
வெள்ளி + கிண்ணம் = வெள்ளிக் கிண்ணம் .
= வெள்ளி ( யால்) ஆன கிண்ணம்.
மரப் பெட்டி ; 
🐦🐦🐦

19)  நான்காம் உருபும் பயனும் உடன் தொக்க தொகையில்
ஒற்று மிகும்.
--------------------------------------------------------------------------
நான்காம் வேற்றுமை உருபு :  ' கு' என்பதாகும்.
இவ் உருபு மறைந்து நின்று ஒரு பொருளின் பயனைக்
குறிக்கும் போது வலி மிகும்.
எ-கா:
↔↔↔
கோழி+ தீவனம் = கோழித் தீவனம் = கோழிக்கு(உரிய)
தீவனம்.
🐦🐦🐦

20) ஆறாம் வேற்றுமைத் தொகையில் காட்டப்படும்
பொருள் அஃறிணையாக இருப்பின்
ஒற்று மிகும்.
-----------------------------------------------------
ஆறாம் வேற்றுமை உருபு ' அது' ஆகும்.
குறிப்பிட்ட பொருள் அஃறிணையாக( உயர்திணை
அல்லாத) இருப்பின் வலி மிகும்.
எ-கா:
↔↔↔
புலி + பால் = புலிப் பால் = புலியினது பால்.
நரி + பல் = நரிப் பல் ; யானைக் கொம்பு;
வாழைக் கன்று ; பாம்புச் சட்டை ; அத்திக் கிளை....
🐦🐦🐦

21). ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.
----------------------------------------------------------------------------
' கண்' என்பது ஏழாம் வேற்றுமை உருபு. இது தொக்கி
நின்று பொருளைத் தரும் போது வலி மிகும்.
எ-கா:
↔↔↔
குடி + பிறந்தார் = குடிப் பிறந்தார் = குடிக்கண் பிறந்தார்
அல்லது குடியின்கண் பிறந்தார். ( இன் என்பது சாரியை-
அதாவது சொல்லமைப்புக்காக வரும் ஓர் ஒட்டு).
மனை + புகுந்தார் = மனைப் புகுந்தார்,
வலைப்பட்டார் ;  மடிக்கொண்டார்.....
பதுமனைப் புகுவிழா.
🐦🐦🐦

22). ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகையில் வலி மிகும்.
-------------------------------------------------
ஏழாம் வேற்றுமை கண் என்னும் உருபுடன்
கால், உள், இல், தலை, உழி, புறம், அகம், பால், இடை
முதலிய உருபுகளையும் பெற்றுள்ளது.
இவை அனைத்துக்கும் ' இடம்' என்னும் ஒரே
பொருள்தான் உண்டு.

எ-கா:
↔↔↔
கூண்டு+ கிளி = கூண்டுக் கிளி =
கூண்டில் வாழும் கிளி.
மனை+ கிணறு = மனைக் கிணறு = மனையில்
உள்ள கிணறு.
நீர்க் கோழி ; வேர்க்கடலை ; தரைப்படை;
மலைப் பாம்பு; நிலக்கடலை; வழிச் செலவு; வழிப்பறி..
🐦🐦🐦

23 ) ஓரெழுத்துச் சொல்லுக்குப் பின் வலிமிகும்.
-----------------------------------------------------------------
ஓர் எழுத்தில் பொருள் குறிக்கும் மொழிகளின் பின்
வலி மிகும்.
--------------------------------------------------------------
எ-கா:
↔↔↔
தீ + சட்டி = தீச்சட்டி
கை + குட்டை = கைக்குட்டை
பூ + கூடை = பூக்கூடை ;  நாப்பழக்கம் ;
தீப்பற்றியது ; ஈக்காடு  ;  ஏச்  சென்றது ;
காப் போல ; ஆம் தின்றது ;  மாப் பூத்தது ;
சேக்கிழார் ; கோச்சேரன்;  பாப்புனைந்தார் ;
நாச்சுவை ; தீப்பிழம்பு ; தீப்பிணி ;  தீப்புண் ;
தீப்பறவை; தீப்பந்தம்...
🐦🐦🐦

🌹🌹🌹🌹.  .......தொடரும்...
நன்றி,
அன்புடன் உங்கள்,
குறளோவியன்  கல்லூர் அ. சாத்தப்பன்.
🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔
எ-கா: பசுமை + தமிழ் = ? (அ) ஈறுபோதல் நெறிப்படி ~ பசு + தமிழ். (ஆ) நடுநின்ற உயிர்மெய் ' சு' கெட்டு ~ ப+ தமிழ் ; ( இ) அடியகரம் ஐ ஆதல் ~ ( ப்+ அ = ப்+ ஐ) = பை+ தமிழ்; ( ஈ) இனமிகல் ( தகரத்திற்கு ந ககர மெல்லினம் மிகுந்து) = (பை +ந்)+தமிழ் = பைந்தமிழ் என்றானது.
(5) தன்ஒற்று இரட்டல் (ஈற்றயல் எழுத்தின் ஒற்று இரட்டித்தல்.
👃👃👃👃👃👃👃👃

எ-கா: வெறுமை + இலை = ? (அ) ஈறு கெட்டு ~ வெறு + இலை - ஆனது; ( ஆ) உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் (ற்+உ) -ற்., ( இ) தன்ஒற்று ' ற்' இரட்டல் = வெற்ற் + இலை - ஆனது; (ஈ) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே ( ற்+இ)=றி; = வெற்றிலை - ஆனது.

(6) முன் நின்ற மெய் திரிதல் :
👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
எ-கா: செம்மை + தமிழ் =? (அ) ஈறு போதல்.. ~ செம்+ தமிழ் (ஆ) முன் நின்ற மகரம் நகரமாய்த் திரிந்து ( மருவி) = செந்தமிழ் - ஆனது.

(7) இனம் மிகல். ( வல்லினத்திற்கு இனமான மெல்லினம் மிகல்.
👃👃👃👃👃👃👃
எ-கா: பெருமை + களிறு = ? (அ) ஈறு போதல் ~ பெரு + களிறு (ஆ) வல்லினத்திற்கு ( க) இனமான மெல்லினம் மிகல் ~ பெரு(ங்)+ களிறு = பெருங்களிறு.

9. மெய்யீற்றுப் புணர்ச்சி. 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
நெறி: 1.
"""""""""""""""
" உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே" -------- நன்னூல் : 204. நிலைமொழி ஈற்று மெய்யுடன் வருமொழி முதலிலுள்ள உயிர் இணைந்து விடும்.
எ-கா: தமிழ் + அன்னை = தமி(ழ்+அ = ழ) ன்னை = தமிழன்னை.

நெறி: 2. "
"""""""""""" "தனிக்குறில் முன்னொற் றுயிர்வரி னிரட்டும்." ---------நன்னூல்: 205. எ-கா: முள் + இலை =? தனிக்குறில் முன் ஒற்று :: முள் ஒற்று இரட்டித்தது :: முள்ள் உடல்மேல் உயிர் ஒன்றியது :: முள் (ள்+ இ = ளி)லை = முள்ளிலை. வேற்றுமைப் புணர்ச்சியில்: ---------------------------------------------
நெறி: 3:
""""""""""""""
(அ) " ணனவல் லினம் வரட் டறவும் பிறவரின் இயல்பும் ஆகும் வேற்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே"

நன்னூல் : 209 :
நிலைமொழி ஈற்று ணகரமும் னகரமும் முறையே வல்லின முதன் மொழியோடு புணரும்போது டகரமாகவும், றகரமாகவும் திரியும். அதாவது, ண- கரம் > டகரமாகவும், ன- கரம் > றகரமாகவும் திரியும். எ-கா: மண் + கலம் = மட்கலம் ( ணகரம் டகரமாதல்), பொன்+ குடம் = பொற்குடம் ( னகரம் றகரமாதல்)

நெறி: 4.
"""""""""""""" "
லளவேற் றுமையிற் றடவும் அல்வழி அவற்றோ டுறழ்வும்வலிவரி னாமெலி மேவி னணவும் இடைவரின்இயல்பும் ஆகும் இருவழி யானுமென்ப"
-----
நன்னூல் : 227. (அ) :

நிலைமொழி ஈற்று லகரமும், ளகரமும் முறையே வல்லின முதன்மொழியோடு புணரும்பொழுது லகரம் றகரமாகவும், ளகரம் டகரமாகவும் திரியும். ல- கரம் > றகரமாகவும், ள- கரம் > டகரமாகவும் திரியும்.
எகா: வேல் + காளை = வேற்காளை ( லகரம்> றகரமாதல்) திரைகவுள் + பயனில் = திரைகவுட் பயனில் (ளகரம் டக்கரமாகியது)
(ஆ) : நிலைமொழியீற்று லகரமும் ளகரமும் மெல்லின முதன் மொழியோடு சேரும்போது லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவும் ம சேரும்போது) = கயன்முள் - என்றாகும். அருள் + மொழி = ( ள், மொ- வுடன் ) அருண்மொழி. நெறி :5.
"""""""""""""""
" னலமுன் றனவும் ணளமுன் டனவும் ஆகும் தநக்கள் ஆயுங் காலே"

----- நன்னூல்- 237.

அதாவது,
1) நிலைமொழி ஈற்றில் னகரமோ, லகரமோ நின்று வருமொழி முதலில் தகரம் வரின் ( அத் தகரம்) றகரமாகவும், நகரம் வரின் அது னகரமாக மாறும். எ-கா: அ) தகரம் றகரமாதல் : பொன்+ தீது = பொன்றீது கல் + தீது = கற்றீது. ஆ) நகரம் னகரமாதல் : பொன் + நன்று = ஞசஞ்ஞஞ்ஞச்சசொஓஅ. கல் + நன்று = கன்னன்று.

2) நிலைமொழி ஈற்றில் ணகரமோ, ளகரமோ நின்று, வருமொழி முதலில் தகரம் வரின், அது டகரமாகவும் நகரம் வரின் அது ணகரமாகவும் மாறும். எ-கா: அ) தகரம் டகரமாதல் : மண் + தீது = மண்டீது முள் + தீது = முட்டீது ஆ) நகரம் ணகரமாதல் : கண் + நீர் = கண்ணீர் முள் + நன்று = முண்ணன்று.

இத்துடன் புணர்ச்சி நெறிகளை முடித்துக் கொண்டு, அடுத்து, நாம் நம் எழுத்து நடையில் அடிக்கடி செய்யும் பிழைகளுள் முகமையான ஒற்றெழுத்து மிகு, மிகா இடங்கள் பற்றிப் பார்ப்போம். ---5-தொடரும் : 09.
நன்றி, அன்புடன் உங்கள், குறளோவியன் கல்லூர் அ. சாத்தப்பன். 🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔🎨↔

குறள் கற்போம் - தொடர் - 07

திருக்குறளை எளிமையாகக் கற்போம். - தொடர் - 07 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 இனிய பெருந்தகையீர், வணக்கம். திருக்குறளை அனைவரும் எளிதில் கற்றுக் கொள்ளும் முறையினை விளக்கும் பொருட்டுத் தொடங்கப்பட்டுள்ள இத்தொடரின் ஏழாம் நிலைக்கு நாம் இப்போது வந்துள்ளோம். முந்தைய பதிவில், குறள்களை ஒருவர் கற்று அறிவதற்குப் புணர்ச்சி நெறிளைக் கற்றுக் கொள்வது இன்றியமையாதது என்று பார்த்தோம். இவை திருக்குறளில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன என்பதையும் சில குறட்பாக்களில் கண்டோம். புணர்ச்சி நெறியில் மேலும் சிலவற்றை இன்று அறிந்து கொள்வோம். இதுகாறும் : (1) உயிரீற்றுப் புணர்ச்சி (2) குற்றியலுகரப் புணர்ச்சி - நெறிகளை அறிந்தோம். இனி, (3) இயல்பாகவும் நெறியாலும் (விதி) நிற்கும் உயிர் ஈறு : 🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼 நெறி: " இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்வித வாதன மன்னே." இயல்பாகவோ, இலக்கண நெறிகளாலோ நிலைமொழி ஈற்றில் நிற்கும் உயிர் எழுத்துகள் க,ச,த,ப , வருமொழியோடு புணரும்போது, பெரும்பாலும் அவ் எழுத்துகள் இரட்டித்துப் புணரும். எ-கா: ----------- 1) இளமை + பருவம். இளமை - இள( மை= ம்+ஐ ) - இங்கு உயிர் ' ஐ' இயல்பாகவே உள்ளது. இவ்வாறு நிலைமொழியின் இறுதியில் உயிர் இருந்தால் க,ச,த,ப - மிகும் . ( மிகும் என்றால் மிகுக்கும் அல்லது வலிந்து ஒலிக்கும் எனப்படும். இளமை + பருவம் = இளமைப்பருவம் =இளமைப்பருவம். [இளமை(+ப்+ப்+)அ+ருவம் ] 'ப்' > இரட்டித்துள்ளது. 2). வண்ணம் + பறவை. வண்ணம் - வண்ண > மவ்வீற்று ஒழிந்து.. வண்(ண்+அ) - இங்கு மகரம் நீக்கப்பெற்று நெறியின்படி ' அ' - உயிர் இறுதியில் உள்ளது. ஆகவே, வண்ணம் + பறவை = வண்ணப் பறவை ஆகும். = வண்ணப்பறவை [ வண்ண(ப்+ப்+)அ+றவை. 'ப' > இரட்டித்துள்ளது. (4) பல சில - இவற்றின் புணர்ச்சி: நெறி : " பல சில எனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பும் மிகலும் அகரம் ஏக லகரம் றகரம் ஆகலும் பிறவரின் அகரம் விகற்பம் ஆகலும் உளபிற." (நன்.170) 1. பல என்னும் சொல்முன் பல என்னும் சொல்லும் சில என்னும் சொல்முன் சில என்னும் சொல்லும் வரும் போது.... (அ) இயல்பாக வரும். : பல+ பல = பலபல (ஆ) வல்லினம் மிக்குப் புணரும் : பல- பல = பலப்பல. ( இ) நிலைமொழி இறுதியிலுள்ள அகரம் கெட, எஞ்சி உள்ள லகரம் றகரமாய்த் திரியும். : பல+ பல = பற்பல (அகரம் கெட்டுள்ளது:'‘ 2. பல சில என்னும் சொற்களின் பின் பிற சொற்கள் புணரும்போது, நிலைமொழியின் இறுதியில் உள்ள அகரம் கெட்டும் புணரும், கெடாமலும் புணரும் அகரம் கெட்டுப் புணர்தல் : பல+ கலை = பல்கலை சில+ வினை = சில்வினை. அகரம் கெடாமல் புணர்தல்: பல+ கலை= பலகலை சில + வளை = சிலவலை. (5) திசைப் பெயர்: 🔼🔼🔼🔼🔼🔼🔼 1) கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைப் பெயர்கள்முன் வேறு திசைப்பெயர்களோ, பிற சொற்களோ வந்து புணரும் போது நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர்மெய்யெழுத்து ' கு' வும் அதன் அயல் எழுத்தாகிய ககர ஒற்றும் ( க்) நீங்கிப் புணரும். எ-கா: வடக்கு+ மேற்கு = வட(க்கு~நீங்கி)மேற்கு =வடமேற்கு. 2) ஈற்று உயிர்மெய் நீங்கியபின் அடுத்து நிற்கும் றகரம் னகரமாகவோ, லகரமாகவோ திரியும். எ-கா: (அ) தெற்கு+ மேற்கு = தென்மேற்கு: [தெற்(கு🚯 நீங்க..) ற்👉ன் ஆனது.(றகரம்👉னகரம்) (ஆ) மேற்கு+நாடு = மேல்நாடு. மேற்(கு🚯 நீங்க..), ற்👉 ல் ஆனது. (றகரம்👉லகரம்) --------------------------------------- குறிப்பு: அடுத்த நெறிக்குப் போகுமுன் இன எழுத்துகள் ↔↔↔ பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். சொற்களில் உள்ள எழுத்துளை இணைக்கும்போது தமிழில், இன்ன எழுத்துக்கு அடுத்து இன்ன எழுத்துதான் வரவேண்டும் என்னும் ஓர் ஒழுங்கு பற்றிக் கூறுவதே இனவெழுத்தாகும். ஒரே இடத்திலும், ஒரே போன்ற முயற்சியாலும் பிறந்த எழுத்துகள் இனவெழுத்துகளாம். இனவெழுத்துகள். 👇👇👇👇👇👇👇 (இன எழுத்துகள்) வல்லின எழுத்துகளுக்கு அவற்றை அடுத்துள்ள மெல்லின எழுத்துகள் இணை எழுத்துகளாக வரும். எ-கா: க-கரத்துக்கு ங-கரமும், ( அங்கு, பொங்கு) ச-கரத்துக்கு ஞ-கரமும், (மஞ்சல், பிஞ்சு ) ட-கரத்துக்கு ண-கரமும், ( கண்ட, உண்ட) த-கரத்துக்கு ந-கரமும், ( அந்த , இந்த ) ப-கரத்துக்கு ம-கரமும், (வம்பன், அம்பு) ற-கரத்துக்கு ன-கரமும், ( மன்றம், கொன்று) இவற்றை அக்காள் தங்கை என்று நினைத்துக் கொள்க... ன் வருமா, ண் வருமா, ந் வருமா என்ற குழப்பங்கள் வரும்போது, அக்காள் தங்கை என்ற நினைவு பயன்படும்... ----------------------------------------------- இனி, புணர்ச்சி தொடர்கின்றது.... (6). பூப்பெயர் : 🔼🔼🔼🔼🔼🔼 நெறி: " பூப்பெயர் முன்இன மென்மையுந் தோன்றும்" - நன்னூல் :200. நிலைமொழி இறுதியில் உள்ள பூ என்னும் பெயர்ச்சொல்முன் வல்லின முதன்மொழி வந்து புணரும்பொழுது அவ்வெழுத்துக்கு இனமான (i) மெல்லெழுத்து மிக்குப் புணரும், எ-கா: பூ+ கொடி = பூங்கொடி (ககரத்திற்கு இனமான மெல்லினம் ' ங்' மிக்குள்ளது) (ii) வல்லெழுத்தும் மிக்குப் புணரும். எ-கா: பூ + செடி = பூச்செடி ( சகரத்திற்கு இனமான வல்லினம் ' ச்' மிக்குள்ளது. (7) மகர ஈற்றுப் புணர்ச்சி; 🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼🔼 நெறி: " மவ்வீ றொற்றழிந் துயிரீ ரொப்பவும் வன்மைக் கினமாத் திரிபவும் ஆகும்." ( நன்னூல் - 219). 1. மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்பொழுது இறுதி மகரம் கெட்டு உயிரீறு போல நின்று வருகின்ற உயிர் முதன்மொழியோடு உடம்படுமெய் பெற்றுப் புணரும். எ-கா: மரம் + அடி > ( மகரம் கெட்டு) = மர+ அடி ஆகி,... ( உடம்படுமெய் பெற்று) > மரவ் + அடி ஆகி,... ( உடல்மேல் உயிர் வந்து ஒன்றி) > மர(வ்+அ) டி..ஆகி.. ( இயல்பே என்னும் நெறிப்படி )= மரவடி என்றானது. 2. மகர ஈறு கெட்டு, வருமொழி முதலில் உள்ள வல்லினம் மிக்குப் புணரும். எ-கா: மரம் + கால் ( மகரம் கெட..) = மர + கால்...ஆகி, மர + கால் ( ர்+அ= ர) > இயல்பினும், நெறியினும், நின்ற உயிர் (அ) முன் கசதப மிகுந்து.. = மரக்கால் ஆனது. 3. மகர ஈறு வருமொழி முதலில் உள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்தும் புணரும். எ-கா: காலம் + கடந்தது = காலங்கடந்தது. ( வல்லினத்திற்கு - ' க' - இனமான மெல்லினம் ' ங்' மிகுந்துள்ளது). இனி , அடுத்த புணர்ச்சி நெறி தொடரும்....08..... நன்றி, அன்புடன் உங்கள், குறளோவியன் கல்லூர் அ. சாத்தப்பன். 🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺🎨🔺