நீத்தார் போற்றுவோம்! ( Neetthaar Pottruvom).
செவ்வாய் போற்றுதும்!
செவ்வாய் போற்றுதும்!
செவ்வியான் ஆக்கமே
சிறப்பெனப் போற்றுதும்!
ஒழுக்கத்து நீத்தார்
உயர்வினை யுள்ளியே
ஒழுக்க மல்லவை
இழுக்கா( து) ஒழிகவே!
வாழ்வின் வகைதனில்
வல்லமை பெற்றவர்
ஊழ்வினை யையும்
உடைத்தே வெல்வார்!
செய்தற்(கு) அரியவை
செய்யார் சிறியோர்,
செய்தற்( கு) அரியவை
செய்வார் போற்றுவோம்!
நிறைமொழி யுடையவர்
நிலத்தில் விதைக்கும்
மறைமொழி யாலே
மாண்பெலாம் பெறுவார்!
குணத்தில் உயர்ந்த
குறைவிலார் கடுஞ்சினம்
கணமும் பொறுத்தல்
கடிதெனக் கொள்வீர்!
அந்தணர் என்பவர்
அருளைக் கொண்டவர்
என்றே சொல்லி
ஏத்துவோம் அவர்புகழ்!
செவ்வாய் போற்றுவோம்
செவ்வாய் போற்றுவோம்!
செவ்வியான் என்றும்
சிதையான் என்றே!
அன்புடன் உங்கள்,
குறளோவியன் கல்லூர் அ. சாத்தப்பன்.
↔ ↔ ↔ ↔ ↔ ↔
செவ்வாய் போற்றுதும்!
செவ்வியான் ஆக்கமே
சிறப்பெனப் போற்றுதும்!
ஒழுக்கத்து நீத்தார்
உயர்வினை யுள்ளியே
ஒழுக்க மல்லவை
இழுக்கா( து) ஒழிகவே!
வாழ்வின் வகைதனில்
வல்லமை பெற்றவர்
ஊழ்வினை யையும்
உடைத்தே வெல்வார்!
செய்தற்(கு) அரியவை
செய்யார் சிறியோர்,
செய்தற்( கு) அரியவை
செய்வார் போற்றுவோம்!
நிறைமொழி யுடையவர்
நிலத்தில் விதைக்கும்
மறைமொழி யாலே
மாண்பெலாம் பெறுவார்!
குணத்தில் உயர்ந்த
குறைவிலார் கடுஞ்சினம்
கணமும் பொறுத்தல்
கடிதெனக் கொள்வீர்!
அந்தணர் என்பவர்
அருளைக் கொண்டவர்
என்றே சொல்லி
ஏத்துவோம் அவர்புகழ்!
செவ்வாய் போற்றுவோம்
செவ்வாய் போற்றுவோம்!
செவ்வியான் என்றும்
சிதையான் என்றே!
அன்புடன் உங்கள்,
குறளோவியன் கல்லூர் அ. சாத்தப்பன்.
↔ ↔ ↔ ↔ ↔ ↔
No comments:
Post a Comment