Tuesday, 24 January 2017

திருவள்ளுவர்நாள்.2048

திருவள்ளுவர் திருநாள் மற்றும்
      உழவர் திருநாள் வாழ்த்துகள்.
👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏

   சுறவம் : 02 2048(தி.பி.)(15-01-2017)
  ------------------------------------------------

உழைக்கும்  கைககளே  உலகை  உயர்த்தும்,
உழைக்கும்  உழவரே  உலகில்  உயர்ந்தோர்!
உழவர்  வழிவரும்  உணவுகள்   தாமே
உலகோர்  வாழும்  உயிராய்  ஆகுமே!
உருண்டு  சுழலும்  உலகம்  கூட
உழவின்  பின்தான்  உருளும்  என்று
ஐயன்  வள்ளுவன்  அன்றே  சொன்னார்,
ஐயம்  இதனில்  அறவே   இல்லையே!
உழுவார்   ஆணியாம்  உலகோர்க்கு  என்றே
வழுவாது  உரைத்தார்  வான்புகழ்  வள்ளுவர்;
உழுதுண்டு  வாழ்வார்   உண்மையில்  வாழ்வார்
தொழுதுண்டு  அவர்பின்  தொடர்வார்   பிறரே!
மண்ணில்  வாழும்  மன்னுயிர்   எல்லாம்
தம்முயிர்  வாழத்   தாளாது  உழைக்குமே!
உழைப்பிலா   உயிர்கள்   உலகில்   இல்லை
உழைப்பு   மட்டுமே  உலகில்   பொதுமை!
உள்ளம்   இலாதவர்  உயரார்  உலகில்
வள்ளுவர்   வகுத்த  வாழ்வியல்  முறையிது!
பொதுமைக்  கோட்பாடு  போற்றிய  வகையில்
முதன்மையில்  இவர்போல்   மொழிந்தார்   இலரே!
---------------
வாழ்க தமிழ்! பெருகுக குறளறம்!
--------------
நன்றி,
அன்புடன் உங்கள்,
குறளோவியன் கல்லூர் அ. சாத்தப்பன்.
🎨. 💃. 🎨. 💃. 🎨. 💃. 🎨 💃 🎨 💃🎨💃  🎨
----------------------------------------------------------------------

No comments:

Post a Comment