Tuesday, 24 January 2017

தமிழர்புத்தாண்டு2048

திருவள்ளுவர்  ஆண்டு-
              **            **
                    2048
              **             **
சுறவம் (தை) - 01  [ 14-01-2017].
  🔔 🔔 🔔 🔔 🔔 🔔 🔔 🔔

      தமிழர்க்குரிய  ஆண்டு!
   ••••••••••••••••••••••••••••••••••••••

தமிழர்    ஆண்டுதைத்   திங்கள்     ஆண்டெனத்
தமிழ்ப்பே    ரறிஞர்    பலர்கூடி     உரைத்தனர்!
வள்ளுவர்    வாழ்ந்தநாள்  வரையறை  கொண்டுத்  
தெள்ளிய    சிந்தையர்த்    திடமாய்    எண்ணி
ஞாலம்      உணர     நல்கிய       முறையிதே!
உலகில்    உள்ள    ஒவ்வோர்      இனமும்
தனக்கெனத்   தனித்தனி  ஆண்டைக்  கொண்டதே!
எனினும்     தமிழர்    அதனைச்     சிறிதும்
எண்ணாது,    ஆரியர்     ஆண்டைத்    தமது
ஆண்டெனத்    தவறாய்   உணர்ந்தழி   கின்றார்!
நமக்கென    ஓராண்டு    உள்ளது     என்றும்,
தமிழர்க்கு      அதுவே   திருவள்     ளுவர்ஆண்(டு)
என்பதைப்   பன்முறை    உரைத்த    பின்னரும்,
இன்னமும்    புத்தி    எய்தினார்    இல்லையே!
ஆகவே      உணர்வீர்    தமிழர்       அனைவரும்,
எதிர்வரும்   தைமுதல்   என்பதே     நமக்குப்
புத்தாண்டுத்   தொடக்கம்  என்பதைத்  தெளிவாய்!
புத்தாடை   உடுத்திப்    பொங்கலிட்டு   அன்று
ஒன்றாய்க்   கூடிக்   கொண்டா    டிடுவோம்
தமிழர்    புத்தாண்டு     பிறந்தது     எனவே!
----------------------
அன்புடன் உங்கள்,
குறளோவியன்  கல்லூர் அ. சாத்தப்பன்.
🎨. 🔔🔔. 🎨.  🔔🔔.  🎨.  🔔🔔. 🎨.  🔔🔔.  🎨.  🔔🔔. 🎨. 🔔🔔

No comments:

Post a Comment